Wednesday 25 March 2020

ராத்திரியின் சொந்தக்காரா...



ராத்திரியின் சொந்தக்காரா...

மைண்ட் வாய்ஸ் ஓட தான் கதை ஆரம்பிக்கனுமா என்று சொல்லியவாரே ஆனந்த விகடனின் பக்கங்களை திங்கள் முன்பகல் 11 மணிக்கு புரட்டினான் வின்சென்ட்.
இதை வைத்து இவன் வெட்டி ஆபிசர் என்று முடிவு பண்ணிடீங்களா அங்க தான் ட்விஸ்டு . வின்சென்ட் நைட் ஷிப்ட்டில் வேலை செய்யும் BPO Employee. சொந்த ஊரான தூத்துக்குடியை விட்டு சென்னைக்கு வந்து வருடங்கள் 6 ஆகின . இத்தனை ஆண்டுகளில் இவன் அடைந்த ஒரே வளர்ச்சி - ஹிப் சைஸ் 30-இல் இருந்து 36 ஆனது தான். (என்ன ஒரு இமாலய வளர்ச்சி !!).  28 வயது ஆன வின்சென்டுக்கு பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் பொறுப்பில்லாதவர்களாக தெரிய ஆரம்பித்தவுடன, அய்யய்யயோ நமக்கு வயசாயிடுச்சு போல என்று அடிக்கடி மொபைல் பிரென்ட் கேமரா வாயிலாக தன தலையில் உள்ள வெள்ளி கம்பிகளை "எண்ணி" பார்த்தான்
நைட் ஷிபிட் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பி மதியம் 12 மணிக்கு மேல் கண்முழிப்பவனுக்கு இன்றைய 10 மணி பள்ளி அரை எழுச்சி புதிது தான்.
அதனால் தான் செய்வதறியாத இந்த Android வீட்டு கன்னுகுட்டி இன்று ஆனந்த விகடன் பக்கம் வந்தது. 
ஆனந்தத்தை முழுதாய் பெறுவதற்குள் இவனின் அலைபேசியில் உசிப்பியது ஒரு குரல் ,
சொல்லு டா சந்தோஷ் என்ற வின்சென்டின் உரிமை குரல் இவர்களின் நட்பின் ஆழம் சொல்லியது.
மச்சி இன்னிக்கி என்ன பிளான் என்று சந்தோஷ் கேட்டவுடன் , - மதியம் 3 மணிக்கு குளித்து முடித்து 4 மணி ஆபிஸ் கேபில் ஏறி , சென்னைக்கு "மிக அருகில்" உள்ள செங்கல்பட்டு ஆபீஸில் இறங்கி , Desk-கின் முன் இருக்கும் வெங்கடாஜலபதியின் படத்திற்கு "Flying Kiss" கொடுத்துவிட்டு, அமெரிக்கா நாட்டு கடன்கார பிரஜைகளின் வங்கி ஆவணங்கள் சரி பார்க்கும் டெய்லி பிளான் , வின்சென்ட் மனதில் புளித்த ஏப்பத்தின் கசப்பை தந்தது .
அதற்குள் சந்தோஷ் உடனே - மச்சி OMR Emerald Pub-ல இன்னிக்கி நைட்டுக்கு 2 பிரீ பாஸ் கிடைச்சிருக்கு... என்றான்
Tabelmate-ஐ விட அதிகம் பயன்படுத்தப்படும் தன் Laptop-இல் Emerald Pub-ன் Review-யை பார்த்தான். (சூப்பர்ஸ்டார் படம் என்றல் கூட 4 ஸ்டார்-க்கு மேல ரேட்டிங் இருந்தால் தான் டிக்கெட் புக் செய்வான்)
மச்சி 4.5 ஸ்டார், சோ கண்டிப்பா போறோம்..என்று சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தான் .
அடுத்த நொடி அவன் மனதை பற்றி கொண்டது பயம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டின் விண்வெளி வீரர்களில் ஒருவன் விடுமுறை கேட்டால் தரும் "ரியாக்ஷனை" போல், லீவு கேட்டால் ரியாக்ஷன் தரும் தன் மேனேஜரின் முகம் கண்முன்னால் வந்து போனது . என்ன பொய் சொல்லி லீவு எடுக்கலாம் என்று எண்ணிய சமயம், ஜன்னல் வழியே பக்கத்துக்கு வீட்டு டிவியின் "சதுரங்க வேட்டை" டயலாக்ஸ் செவிகளில் பாய்ந்தது
உடனே மேனேஜருக்கு கால் செய்து , ரூம் மெட்டுக்கு ஆக்சிடென்ட் சார், Lifeline ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம் , இன்னைக்கி ஒரு நாள் லீவு எடுத்துகிறேன் சார் என்றான் . அதற்கு மேனேஜரோ – ஒ.. டேக் கேர்.. பா .. எதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு என்று சொல்லி முடித்தார்
வின்சென்ட் முகத்தில் எதையோ சாதித்த ஒரு திருப்தி !!
நாம சொல்ற பொய்யில ஒரு உண்மை இருக்கனும் என்ற சதுரங்க வேட்டை வரிகள் "மைண்ட் வாய்சாக" ஒலித்தன. காரணம் வின்சென்ட் ரூம் மெட்டுக்கு விபத்து நடந்தது உண்மை ஆனால் அது "போன மாசம்"
OMR Pub –
இன்றைய இளைஞர் பாசறை. மது மாது இரண்டும் அளவின்றி கிடைக்கும் இடம் !! அவை கிடைப்பது அவனவன் மடி கனத்தை பொறுத்தது !! இதில் விண்டோ ஷாப்பிங்கும் அடங்கும். இந்த ஜோதியில் ஐக்கியமாக வின்செண்டும் சந்தோஷும் விரைந்தனர் . லேடியோடு ஜோடியாக வருபவனை மட்டும் அனுமதிக்கும் பப்-களின் மத்தியில், சிங்கள் பசங்களுக்கும் ஜோடிகள் உள்ளே கிடைக்கலாம் என்னும் உயரிய மாண்பை கொண்டு அனைவரையும் அனுமதிக்கும் "திருத்தலம்" இந்த எமரால்டு பப்.
மச்சி, உள்ள போயி தூங்கிட கூடாது டா என்று சந்தோஷ் சொல்ல , டேய் 6  வருஷமா BPO-ல தூங்காம வேலை செஞ்ச அனுபவம் டா…. யாருகிட்ட !! என்று தவுலத்தாய்சொல்லி உள்ளே நுழைந்தனர்
இரைச்சலான இசையும், புகைமண்டல பூமியும் , பெண்களின் சிரிப்பும் இந்த இரண்டு கன்னி சாமிகளை சற்றே மிரட்சி அடைய வைத்தது
இருப்பினும் "கேசுவல்"-ஆ வைத்துக்கொள்ள ஒரு "MOCK TAIL" ஆர்டர் செய்தனர். விலை என்னவென்று கேட்காமல் வாங்கும் பழக்கம் நம்மவர்களுக்கு இங்கு இருந்து தான் தொற்றிக்கொண்டதோ ??
சீமெண்ணை நிறத்தில் இருந்த அந்த மொக்க டைல் பானத்தை சுவைத்த படியே, விண்டோ ஷாப்பிங் ஆரம்பம், !!
அந்த ப்ளூ அண்ட் வைட் டாப்ஸ் எனக்கு, என்று சொல்லி வாய்மூடுவதற்குள் , ஆறடி ஆண்மகன் அவளை "அபேஸ்" செய்தான் .
இது நாள் வரை, பெண்களை , மொட்டை மாடியில் இருந்து விமானத்திற்கு டாடா காட்டுவது போல ரசித்த சந்தோஷிற்கு இந்த ஏமாற்றம் புதிது அல்ல
இதற்கிடையில் வின்சென்ட் கோதாவில் இறங்கி கூட்டத்துடன் நடமாட தொடங்கினான். இரண்டு முறை தன் கைகள் அருகில் உள்ள பெண்ணின் மீது தெரியாமல் பட்டதும் "சாரி" கேட்ட வின்சென்டை பார்த்து சற்று தள்ளி நின்று ஆடிய ஆரஞ்சு டாப்ஸ் பெண், புன்னகைத்தாள்
நெருங்கிவந்த அந்த ஆரஞ்சு  மிட்டாய் இவன் காதுகளில் "First Time- என்றாள்,  இவள் எதற்கு கேட்கிறாள் என்று கூட அறியாமல், சரி எல்லாத்துக்குமே நம்ம “First Time” தானே என்று மண்டையை ஆட்டினான் .
அப்போது "யாக்கை திரி காதல் சுடர்" என்று சத்தமாக ஒலித்த ஆயுத எழுத்து பாடல் இவன் கண்களுக்கு இவளை த்ரிஷாவாக காட்டியது. ஆனால் எந்த கோணத்திலும் வின்சென்ட் சித்தார்த்தாக அங்கிருந்த யாருக்கும் தென்படவில்லை
அடுத்த பாடலுக்கு ஆரஞ்சு மிட்டாய் இவனிடம் இருந்து தள்ளி வேறு ஒரு கும்பலுடன் ஆடத்தொடங்கியவுடன் , இவன் காதல் கோட்டை சரிந்தது
பப் என்பது, காதல் வளர்க்கும் இடம் அல்ல, நம்மை முழுவதுமாக வெளிக்கொணரும் இடம் என்றும் , இது பெண்களை மோகிக்க வரும் இடம் அல்ல அவர் அவர் சோகம் மறந்து "ஆடுகின்ற" இடம் என்ற உண்மை புரிந்தது
சந்தோஷை அழைத்து வின்சென்ட் - தன்னை மறந்து ஆடத்தொடங்கினான் இம்முறை எதிர்பார்ப்புகள் எள் அளவும் இன்றி ... இதை பார்த்தவர்கள் உடன் சென்று ஆடினர். அவர்களில் பெண்களும் அடக்கம் . சிலர் கண் ஜாடைகள் காட்டியும் இவர்கள் ஆட்டம் தொடங்கியது.
இதனை தூர நின்று வேடிக்கை மட்டும் பார்த்த நடுத்தர வயது பவுன்சர் மனதில் தோன்றியது - வாழ்க்கையும் கூட இப்படித்தானே , எதிர்பார்ப்பின்றி நம் மனதிற்கு சரி என்று பட்டத்தை செய்வது , மெய் மறந்து வாழ்வது . இதில வந்தவை வரட்டும், தந்தவை தரட்டும் ....
அதிகாலை 4 மணிக்கு வெளியே வந்த வின்செண்டும் சந்தோஷும் இனிய நினைவுகளை மட்டும் தங்கள் பைக்கின் பின் ஏற்றி சென்றனர் ..
அப்போது எதிர் காற்றில் பறந்து வந்த காகித துண்டு சொன்னது "ஏலே Don’t Worry Be Happy !! "

முற்றும்

எழுத்து 

நெ செ 

                                                                                                                                                                           







No comments:

Post a Comment